;
Athirady Tamil News

பிரசவத்திற்கு முன் எவ்வாறான முன் ஆயத்தங்களைச் செய்தல் வேண்டும்? முன் ஆயத்தங்கள் என்றால் என்ன..?

0

நீங்கள் கர்ப்பவதியாக இருக்கின்றீர்கள் என்றால் சில சமயங்களில் நீங்கள் தனியாக இருக்கும் போது, குழந்தை பிறப்புத் தொடர்பான வினாக்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பிரசவ முன் ஆயத்த வகுப்புக்கள் உங்களுக்காக நடாத்தப்படுகின்றன.

பிரசவ முன் ஆயத்த வகுப்புக்கள் 6 தடவைகள் நடைபெறும். இவ் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மருத்துவமாதுவும், ஒரு மொழிபெயர்ப்பாளரும் பங்குபற்றி உங்களுடன் உரையாடுவார்கள்.

இவ் வகுப்புக்களில், அவர்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை தருவதுடன், உங்கள் கேள்விகளுக்கும் திருப்திகராமான பதில்களைத் தருவார்கள்.

கர்ப்பகாலம், பிரசவம் தொடர்பாகவும் அத்துடன், பிள்ளைக்குப் பாலூட்டல், பிரசவத்தின் பின் வீட்டில் பிள்ளையுடன் எவ்வாறு நேரத்தை செலவிடல் என்பன தொடர்பான முன் ஆயத்தங்களை உங்களுடன் விளங்கப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு இனத்தின் பண்பாட்டிற்கும், பழக்க வழக்கங்களிற்கும் மரியாதை கொடுத்து, ஏனைய நாட்டுப் பெண்களுடன் சிறு குழுக்களில் இணைந்து உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை தொடர்பாக உரையாடலாம்.

பிரசவ முன் ஆயத்த வகுப்புக்கள் எப்போது நடைபெறும்.

கர்ப்பம் தரித்து 5ஆம் மாதத்திற்கும் 8 ஆம் மாதத்திற்கும் இடையில் இவ்வாறான வகுப்புக்களுக்குச் செல்வது மிகவும் சிறந்தது.

இவ்வாறான வகுப்புக்களில் நீங்கள் ஏனைய கர்ப்பவதிகளைச் சந்தித்து, உங்களுடையதும் அவர்களுடையதுமான அனுபவங்களை, எதிர்பார்ப்புக்களையும் பறிமாற்றிக்கொள்ளலாம்.

பிரசவ முன் ஆயத்த வகுப்புக்கான கட்டணம் எவ்வளவு?

ஒரு பெண்ணிற்கு 6 வகுப்புக்குளுக்கு 30 சுவி சுபிராங் ஆகும்.

இவ் கட்டணத்தை உங்களுக்கு செலுத்தமுடியாவிட்டால், தயவு செய்து முதலாவது வகுப்பிலே இவ் வகுப்புப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

பிரசவ முன் ஆயத்த வகுப்புக்கான கட்டணத்தில் 100 சுவிசுபிராங்கை மட்டுமே உங்களுடைய மருத்துவக்காப்புறுதி பொறுபேற்கும். மிகுதிச் செலவை பேர்ண் மானிலம் பொறுப்பேற்றுக் கொள்ளும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + ten =

*