;
Athirady Tamil News

என் மகனுக்கு உதவிடுங்கள்: பிரித்தானிய அரசிடம் கதறும் தாய்…!!

0

வலிப்பு நோயால் அவதிப்படும் தன் மகனின் உயிரை காப்பாற்ற பிரித்தானிய அரசு உதவ வேண்டும் என பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Warwickshire நகரில் வசித்து வரும் ஹனா டெகான்- ட்ரியூ டிங்லி தம்பதியரின் 5 வயது மகன் Alfie Dingley.

8 மாத குழந்தையாக இருந்தபோது PCDH19 என்னும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அந்த நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அவனுக்கு கஞ்சா இலையில் தயாரிக்கப்படும் எண்ணெயில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அந்த எண்ணெய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிறுவனுக்கு நெதர்லாந்தில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் சில சிக்கல்களை சந்தித்த சிறுவனின் குடும்பம் மீண்டும் பிரித்தானிய திரும்பியுள்ள நிலையில் பிரித்தானிய அரசுக்கு சிறுவனின் தாய் நெஞ்சை உருக்கும் வகையில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாட்டின் சுகாதார சேவை அலுவலகத்துக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் என் மகனுக்கு மட்டும் விதிகளை தகர்த்து எண்ணெய் பயன்படுத்த அனுமதி வழங்கிட வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், அவரின் இந்த நியாயமான கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என Tory MP Crispin Blunt தெரிவித்துள்ளார்.

சிறுவனை தாக்கியுள்ள இந்த வலிப்பு நோய் உலக அளவில் ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eighteen =

*