;
Athirady Tamil News

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத்…!!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அமைச்சரவையில் மாற்றமொன்று விரைவில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்தாலோசித்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராகவுள்ள சாகல ரத்நாயக்க தம் அமைச்சிலிருந்து விலகுவதற்குத் தயாராக உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 11 =

*