;
Athirady Tamil News

அரசியல் நிலவரம் குறித்து இன்று மாலை பாராளுமன்றத்தில் விவாதம்..!!

0

தற்போதய அரசியல் நிலவரம் குறித்து இன்று மாலை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

கூட்டு எதிரணி சபாநாயகரிடம் விடுத்த கோரிகைக்கு அமைவாக இந்த விவாதம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை கட்சி தலைவர்கள் கூட்டத்தினை கூட்டுவதற்காக பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன அறிவித்தார்.

சபாநாயகரிடம் கைளிக்கப்பட்டுள்ள அந்தப் பிரேரணைக்கு 20 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்தப் பிரேரணை சபாநாயகரிடம் எழுத்துமூலம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரிஎல்ல தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியாது எனவும் அவர் ஆட்சேபனை வெளியிட்டார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு சற்று முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, தம்மிடம் குறித்த பிரேரணையை கைளித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரேரணையை தொடர்பிலான விவாதம் குறித்து கலந்துரையாடி தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த சபாநாயகர் தீர்மானித்தார்.

இதனால் சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 15 =

*