;
Athirady Tamil News

பிரித்தானியா பள்ளிகளில் இப்படியும் நடக்கிறதா? அதிரவைக்கும் ஆய்வு…!!

0

பிரித்தானியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை போர்டிங் பள்ளி மாணவ, மாணவிகள் மீது நூற்றுக்கணக்கான பாலியல் தாக்குதல்கள் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பிரித்தானியாவின் ஐ டிவி என்ற தனியார் தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பிரபல பள்ளிகளில் இது தொடர்பான 31 நேரடி விசாரணையை பொலிசார் தற்போது மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மாணவ, மாணவிகள் மீது பாலியல் தொல்லை மற்றும் பாலியல் தாக்குதல்கள் நடத்தியதாக இதுவரை 425 பேருக்கு மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் 160 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பத்திரிக்கை துறையில் பிரபலமாக இருக்கும் அலெக்ஸ் ரெண்டன் கூறுகையில், நான் பிரித்தானியா பள்ளியில் படிக்கும் போது என்னுடைய கணக்கு மற்றும் வரலாறு ஆசிரியர்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்.

தற்போதும் இது போன்ற விடயங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.

தோராயமாக பிரித்தானியாவில் உள்ள 480 போர்டிங் பள்ளிகளில் 75000 மாணவர்கள் இருக்கிறார்கள்.

அதே போல கடந்த 2011லிருந்து 2014 வரையிலான காலக்கட்டத்தில் 5500 பாலியல் குற்றங்கள் பிரித்தானியா பள்ளிகளில் பதிவாகியுள்ளதும், அதில் 4,000 பாலியல் தொல்லை, தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் 600 கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 8 =

*