;
Athirady Tamil News

400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நகைச்சுவை நடிகர் மரணம்…!!

0

தெலுங்கு திரைப்பட மூத்த நகைச்சுவை நடிகர் குண்டு ஹனுமந்த ராவ் தனது 61-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹனுமந்த ராவ்.

400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ராவ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை காலமானார்.

கடைசி காலத்தில் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்த ராவுக்கு தெலுங்கானா அரசு நிதியுதவி அளித்து வந்தது.

ராவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eight =

*