;
Athirady Tamil News

பாட்டியிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்ட பேரன்…!!

0

வீட்டில் தனிமையில் இருந்து 77 வயது வயோதிப பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், பிங்கிரிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரின் மனைவி தற்போதைய நிலையில் வீட்டுப்பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்புரிவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

கொஸ்வத்த , கஜுவத்த பிரதேசத்தை சேர்ந்த குறித்த வயோதிப பெண்ணின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் , மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கடைக்கு அனுப்பி சந்தேகநபர் இந்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 24ம் திகதி இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய குறித்த சந்தேகநபர் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணின் உறவு முறை பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*