;
Athirady Tamil News

மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்…!!

0

நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ பகுதியிலிருந்து ருவான்புர கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே ருவான்புர – ஹப்புகஸ்தலாவ வீதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ருவான்புர பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார எனும் 27 வயது இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், விபத்து நேர்ந்த போது முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்தவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாததால் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*