;
Athirady Tamil News

பெண் அதிகாரிக்கு ஆண் உத்தியோகத்தர் செய்த மோசமான செயல்…!!

0

யாழ் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடைமையாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த பெண் உத்தியோகத்தர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர், வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் முகநூலின் மூலம் நட்பாகி தனது உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுத்து தருமாறு பின் கதவால் முயற்சி மேற்கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சின் உத்தியோகத்தர், அவரது கோவைகளை தனக்கு யாழில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்புமாறும் அமைச்சின் கணக்குக்கு உரிய தொகையை வைப்பிலிடுமாறும் பணித்துள்ளார்.

இதனையடுத்து இவையனைத்தையும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக நிறைவேற்றியுள்ளார். எனினும் சட்ட ரீதியாக அமைச்சின் அலுவலர் இவரது விடயத்தை கையாண்டு உரிய கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

ஆனாலும் இவரது ஆவணங்கள் போலியானவை என கூறி தூதுவராலயம் அவரது வீட்டு விலாசத்துக்கு திருப்பி அனுப்பியது.

இதனையடுத்து, குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர், முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியதோடு தனது உறவினர் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் விசாரணை நடாத்த அமைச்சு அதிகாரிகள் குறித்த நபரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் ஜெயராஜ் அவர் அங்கு செல்லாது தொடர்ச்சியாக அந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளதாகவும் இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலரிடமும் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு குறித்த நபரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*