;
Athirady Tamil News

தமிழகத்தையே உலுக்கிய ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு…!!

0

தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலைவழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் நிகிதா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி (6) என்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைதானவன் தஷ்வந்த் தர்ஷன் (22). சிலமாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தான். இதற்கு பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வெளியில் வந்த தஷ்வந்த் கருத்துவேறுபாடு காரணமாக தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவாகினான். பின்னர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் மும்பையில் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் கடந்த 14-ம் தேதியன்று நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று ஹாசினி கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 7 =

*