;
Athirady Tamil News

17 பேரை கொன்ற மாணவனின் மற்றொரு வீடியோ வெளியானது…!!

0

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேரின் இறப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் மாணவன் பள்ளியை விட்டு நீக்கப்படுவதற்கு முன் சக மாணவர்களுடன் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Marjory Stoneman Douglas பள்ளியின் முன்னாள் மாணவனான Nikolas Cruz இதுபோல் குறைந்தது ஐந்து முறை சண்டையில் ஈடுபட்டதாக பள்ளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், காக்கி நிற முழுக்கால் சட்டையும் வெள்ளை நிற T ஷர்ட்டும் அணிந்துள்ள அவன் சக மாணவர்களுடன் சண்டையிடுவது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அவன் இரண்டு நாட்கள் பள்ளியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.

அதற்குப்பிறகு கடந்த புதனன்று பள்ளிக்குத் திரும்பிய அவன் துப்பாக்கியால் சுட்டதில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.

வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் வியாழனன்று நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட Nikolas Cruz தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*