;
Athirady Tamil News

சமூகவலைதள சவாலால் நேர்ந்த விபரீதம்: மருத்துவமனையில் நால்வர் அனுமதி..!!

0

ஜேர்மனியில் சமூகவலைதள சவாலில் ஈடுபட்ட 4 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் தற்போது பிரபலமாக நடந்து வரும் சமூகவலைதள சவாலின் பெயர் “Grill-Pool-Challenge”.

இந்த சவாலை ஏற்கும் நபர்கள், வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாட்களில் செய்வனவற்றை குளிர்காலத்தில் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

Tannheim பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வாரும் நடுத்தர வயதுடைய(31 -67) நான்கு பேர் இந்த சவாலை ஏற்றுள்ளனர்.

இதற்காக உயர்ந்த லொறி ஒன்றில் தண்ணீர் நிரப்பி அதில் அவர்கள் இருந்த போது தவறுதலாக கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மக்கள் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 19 =

*