;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடல்…!!

0

மட்டக்களப்பு மாநகரசபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இலங்கை தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீநேசன் மற்றும் யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பில் பேசு பொருளாக இருக்கின்ற மாநகரசபையின் மேயர் தெரிவு தொடர்பில் வெற்றியீட்டிய மாநகரசபையின் உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மேயர் தெரிவு தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுமென கட்சியின் செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 10 =

*