;
Athirady Tamil News

மன்னார் பொது வைத்தியசாலைக்கு மருத்துவ கருவிகள் அன்பளிப்பு..!! (படங்கள்)

0

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோயாளிகளின் நிலமையை கண்காணிக்கும் கருவிகளை லண்டன் தமிழ் மாணவர் ஒன்றியம் அன்பளிப்புச் செய்துள்ளனர்.

குறித்த கருவிகள், லண்டன் புனர்வாழ்வு புது வாழ்வு அமைப்பினூடாக அவ் அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் மயூரனினால், வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஊடக மன்னார் பொது வைத்திய சாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நான்கு கருவிகள் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 2 =

*