;
Athirady Tamil News

பிரதமரை நீக்க சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையில்லை! – மஹிந்த ராஜபக்ஷ..!! (வீடியோ)

0

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமற்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமரை பதவிநீக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட மஹிந்த, அதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்தால் மாத்திரமே அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவோம் எனக் குறிப்பிட்ட மஹிந்த, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமருக்கு ஆதரவளிக்க மாட்டோமென தெரிவித்தார். எனினும் பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் காணப்படும் உடன்படிக்கையின் பிரகாரமே பிரதமர் பதவி அமையுமென மஹிந்த தெரிவித்தார்.

அத்தோடு, தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரியுள்ளதோடு, அதன் பிரகாரம் உரிய இடம் கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள் என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ”பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் தெரியும்” எனக் கூறிச் சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*