;
Athirady Tamil News

மகனின் திருமண விழாவில் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சோகம்…!!

0

பீகார் மாநிலம் நளந்தா மாவட்டத்தில் மகனின் திருமண விழாவில் தந்தை சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் நிஷித் ப்ரியா கூறுகையில்,”நேற்றிரவு பீகார்ஷரிஃப் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்சி கலி பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருமணவிழாவில் மணமக்கள் தங்களின் மாலையை மாற்றிய பின் மணமகனின் தந்தை அஜய் ஷா அடையாளம் தெரியாத நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஜய் ஷாவை ஏன் மர்ம நபர் சுட்டுகொன்றார் என்பது தெரியவில்லை.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*