;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: 5 மாணவர்கள் பலி; 29 பேர் காயம்…!!

0

மகாராஷ்டிராவின் மேற்கே கோல்ஹாபூர் மாவட்டத்தில் மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில் சங்கிலி நகர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இதில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் சிவஜோதியை சுமந்து கொண்டு, 44 மாணவர்கள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் நகாவன் கிராமம் அருகே லாரி வந்தபொழுது வாகனம் ஒன்று பின்னால் வந்து மோதி விபத்து ஏற்படுத்தியது. லாரிக்கு பாதுகாவலாக உடன் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் மீதும் வாகனம் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர். 29 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*