;
Athirady Tamil News

கச்சதீவு திருவிழாவில் முதல் தடவையாக சிங்களத்தில் திருப்பலி…!!

0

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில், இம்முறை சிங்களத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி, இலங்கை இந்திய யாத்திரிகர்களுடன் கச்சதீவு திருவிழாக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், சிங்கள மொழி மூலமான ஆராதனையை காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்ரமசிங்க ஆண்டகை நடத்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் யாத்திரிகர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இம்முறை திருவிழாவில் இலங்கையிலிருந்து சுமார் 10 ஆயிரம் யாத்திரீகர்களும் இந்தியாவில் இருந்து சுமார் ஐயாயிரம் யாத்திரீகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − six =

*