;
Athirady Tamil News

அட்டனில் குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ..!! (படங்கள்)

0

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் சேகுலர் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பரவல் சம்பவம் ஒன்று எற்பட்டுள்ளது 19.02.2018. திங்கள் கிழமை மதியம் 12மணி அளவில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலினால் கூரை பகுதி முற்றாக எறிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது குடியிருப்பின் உள்பகுதியில் பத்திரிக்கைகள் அதிகமாக காணபட்டதோடு நாட்டில் நிலவுகின்ற அதி கூடிய வெப்பத்தின் காரணமாக குடியிருப்புக்கு விரிக்கபட்டுள்ள கூரைதகடுகள் அதிக வெப்பமடைந்த்தன் காரணமாகவே குறித்த குடியிருப்பு தீ பற்றியுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த குடியிருப்பில் இர்ருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் எற்பட வில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் குறித்த தீயினை கட்டுபட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − thirteen =

*