;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது: டளஸ்..!! (வீடியோ)

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”ஐக்கிய தேசியக் கட்சியின் இரு கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதலில் சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. அதன் பின்னர் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திலும் பிரதமர் எதிர்பார்த்த விடயம் நடக்கவில்லை. 113 உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெற்று இன்று காலை அவற்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்து பெரும்பான்மையை நிரூபிக்க முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. அவர்களே தற்போது உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக உள்ளனர். அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதமர் ரணிலை நிராகரித்துள்ளனர்

தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லையென்பது தெளிவாகிவிட்டது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க.விற்கு 32 சதவீதமான வாக்குகளே கிடைத்தன. ஜனாதிபதிக்கு 14 வீதத்தை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. இருவருக்குமே மக்கள் ஆணை கிடைக்கவில்லை.

113 உறுப்பினர்களின் ஆதரவின்றியே நாட்டின் பிரதமர் ஆட்சியில் உள்ளார். இந்நிலையில், எமக்கு உண்மையான அரசாங்கம் ஒன்று இல்லை என்ற விடயத்தை நாட்டு மக்களுக்கு ஊடகங்களே தெரிவிக்க வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*