;
Athirady Tamil News

சொந்த மகள் உள்ளிட்ட 200 பேரை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய பிரித்தானியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

0

பிரித்தானியாவில் சொந்த மகள் உட்பட 200 பேரை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்திய நபருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பட்டதாரியான 29 வயது மத்தேயு ஃபால்டர் மீது மொத்தம் 137 வழக்குகள் பதியப்பட்டு அவை அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 46 புகார்கள் வந்துள்ளதை அடுத்தே பொலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இவரால் பாதிக்கப்பட்ட 3 பேர் குற்றுயிராக மீட்கப்பட்ட நிலையிலேயே கடந்த ஆண்டு யூன் மாதம் பொலிசார் கைது செய்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் 666devil என்ற புனைப்பெயரில் நபர் ஒருவர், தமது மகளை சித்ரவதை செய்ய வேண்டும் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து பிரித்தானியா முழுவதும் எச்சரிக்கை விடுத்த பொலிசார், குறித்த பதிவுக்கு உரிய நபரை கைது செய்யவும், தொடர்புடைய சிறுமியை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில் யூரோபோல் மற்றும் அவுஸ்திரேலிய பொலிசார், குறித்த நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார் குறித்த நபர் பர்மிங்காம் பகுதியில் குடியிருப்பது தெரியவந்தது.

ஃபால்டர் எப்போதும் தமக்கு சிக்கும் நண்பர்களை மிக கொடூரமாக சித்ரவதை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் ஒருவரின் பிறப்பிறுப்பை சிதைத்து சித்ரவதை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியா மட்டுமின்றி அமெரிக்கா, கானடா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் இருந்தும் ஃபால்டருக்கு நட்பு வட்டம் இருந்துள்ளது.

இவர்கள் அனைவரையும் மிக கொடூரமாக சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் ஃபால்டர் மீதான விசாரணை முடிவுக்கு வந்ததால் அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*