;
Athirady Tamil News

சர்வதேச இராணுவ விளையாட்டு கழக ‘டே ரன் – 2018’…!! (படங்கள் & வீடியோ)

0

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த ‘டே ரன் – 2018’ நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன கலந்துசிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட குறித்த ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி கொழும்பு -02 மலே வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிறைவுற்றது.

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு முப்படை தளபதிகள் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த வருடாந்த ‘டே ரன் – 2018′ நிகழ்வில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 134 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டினூடாக நட்பு’ எனும் குறிக்கோளுக்கு அமைவாக ஆயுத்தப்படையினரை விளையாட்டினூடாக உலக சமாதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவதே இக்கழகத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்தநிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 9 =

*