;
Athirady Tamil News

மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் 70ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவிக்கையில் ,

மாவட்டத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் இயக்கம் என இரத்தத்திற்கான தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் உயிரைப் பாதுகாக்க உதவும் இரத்ததானத்தினை செய்வதற்கு பின்நிற்கின்ற மனோபாவமும் முன்வராமையும் காணப்படுகிறது. இரத்தம் வழங்குவதனால் உடலுக்குப்பிரச்சினைகள் ஏற்படும் என்ற தவறான எண்ணப்பாடு மாற்றமடைய வேண்டும்.

மட்டக்களப்பு இரத்த வங்கியானது சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்ற போதும் இரத்தம் வழங்குபவர்கள் போதாமை காரணமாக தட்டுப்பட்டை எதிர் கொண்டு வருகிறது.இந்த இரத்ததான முகாமில் பங்குகொண்டு மாவட்டத்தின் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான தேசிய பணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒத்துழைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்

இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்சான் பெல்லன , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இப்ரா லெப்பை , மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.ஜே. ஜாகொட ஆராய்ச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பொருந்தொகையானோர கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*