;
Athirady Tamil News

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு? பரிதாபமாக உயிரிழந்த தமிழர்..!!

0

விமானத்தில் வழங்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்ட சிங்கப்பூர் தமிழர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், இவருக்கு சுமன் என்ற மகன் உள்ளார். சிங்கப்பூர் தமிழரான இவரின் மூதாதையர்கள், மூன்று தலைமுறைக்கு முன்பு இந்தியாவிலிருந்து சென்று சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளனர்.

தற்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள சுமன், சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் தரிசனம் செய்வதற்காக கடந்த 7-ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார்.

திருச்சி சென்ற அவர் அங்கிருக்கும் மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியத்தில் இருக்கும் தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்ட சுமன், தான் விமானத்தில் வந்தபோது நூடுல்ஸ் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்டதிலிருந்து அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுவருவதாக நண்பரிடம் கூறியுள்ளார்.

வலி தாங்காமல் துடித்ததால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை, தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர் திடீரென்று மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார்.

மயங்கிய நிலையில் இருந்த சுமனை அவருடைய நண்பர்கள், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுமன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக கூறியதால், அதிர்ச்சியில் உறைந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 10 =

*