;
Athirady Tamil News

கைப்பையுடன் எக்ஸ்ரே மிஷினுக்குள் நுழைந்த பெண்: அதிர்ச்சியடைந்த பயணிகள்..!!

0

திருட்டுப் பயம் காரணமாக எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் தன் கைப்பையுடன் பெண் ஒருவர் நுழைந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுன் என்ற இரயில் நிலையம் உள்ளது, இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்வதால், அவர்களின் லக்கேஜ், கைப்பைகள் போன்றவைகளை சோதனை செய்வதற்காக எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரயில் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரின் கைப்பையை சோதனை செய்ய அதிகாரிகள் எக்ஸ்ரே மெஷினுக்குள் அனுப்ப முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அப்பெண்ணோ அதில் பணம் இருந்ததால், பணத்தை திருடிவிடுவார்கள் என்று கூற கைப்பையுடன் தானும் எக்ஸ்ரே மிஷனுக்குள் நுழைந்தார்.

மிஷினுக்குள் சென்ற இவரின் உருவம் வந்துகொண்டிருந்ததால் அங்கே காத்திருந்த பயணிகள் சிலர் பரிசோதனை மிஷினை பார்த்து பயந்துள்ளனர்.

வெளியே வந்த அவரிடம் கேட்ட போது, திருட்டுப் பயம், என் பையை அப்படியெல்லாம் தனியாக விட முடியாது என்று கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*