;
Athirady Tamil News

வெல்லவாய – வதிஹெலயாய மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவல்…!!

0

வெல்லவாய வதிஹெலயாய மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் நேற்று மாலை வரையில் சுமார் 100 ஏக்கர் வனாந்தரம் தீக்கிரையானது.

நேற்று நண்பகலில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

வெல்லவாய பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தீ பரவல் படிப்படியாக அதிகரித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு கோட்டை பகுதியிலும் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கோட்டை தொடரூந்து நிலையத்தில் உள்ள ஒரு களஞ்சிய அறையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

கொலன தீயணைப்பு படையினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் சிலநாட்களுக்கு நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள, அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − thirteen =

*