;
Athirady Tamil News

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது..!!

0

கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 31 வயதுடைய சமிந்த என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த வர்த்தக முரண்பாடுகளே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

23 மற்றும் 30 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + four =

*