;
Athirady Tamil News

கரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்: வைரலாகும் புகைப்படம்…!!

0

தாய்லாந்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவத்தினர், பயிற்சியின் ஒருபகுதியாக கரு நாக ரத்தம் குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆசிய நாடுகள் சில போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தாய் ராணுவத்துடன், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் மலேசியா ராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தினர் சுமார் 6,800 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

திங்களன்று, காட்டு விலங்குகளை எவ்வாற்று பொறி வைத்து சிக்க வைப்பது என ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கொடும் வனத்தில் இருந்து எவ்வாறு ராணுவத்தினர் தப்பி வெளியேறுவது என்ற பயிற்சியின் ஊடே இந்த வனவிலங்கு சிக்க வைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க ராணுவத்தினருக்கு கரு நாகங்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பயிற்சிகளை தாய் ராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.

அதில் தலைப் வெட்டப்பட்ட உயிருள்ள கரு நாகங்களின் ரத்தம் குடிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*