;
Athirady Tamil News

உங்களை வெறுக்கிறேன்: டாக்ஸி டிரைவரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பயணி…!!

0

டாக்சி டிரைவரான சீக்கியரின் தலையில் துப்பாக்கியை வைத்து, டர்பன் அணிந்தவர்களை வெறுக்கிறேன் என பயணி மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் உபர் நிறுவனத்துக்கு சொந்தமான வாடகை காரை குர்ஜித் சிங் என்ற சீக்கியர் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 29-ஆம் திகதி மோலின் பகுதியில் இரண்டு பயணிகளை ஏற்றியுள்ளார். அந்த பயணியில் ஒருவர் நீ யார், எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று மிரட்டிய படி கேட்டுள்ளார்.

இதற்கு குர்ஜித் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அந்த பயணி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அவர் தலை மீது வைத்து நீ என்ன சீக்கியரா, நான் சீக்கியர்களை வெறுக்கிறேன். டர்பன் அணிந்தவர்களை எனக்கு பிடிக்காது என்று ஆத்திரமாக கூறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத குர்ஜித் அவர்களை சாதுர்யமாக காரிலிருந்து இறக்கி விட்டு அங்கிருந்து தப்பியியுள்ளார்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் அந்த பயணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை அந்த பயணி கைது செய்யப்படாத நிலையில், அமெரிக்காவில் குர்ஜித் சட்டப்பூர்வ அனுமதி பெற்று வேலை செய்து வருகிறார். அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியாது. அதுமட்டுமின்றி அவர் இந்தியர் என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சமீபகாலமாக சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 16 =

*