;
Athirady Tamil News

மரணத்திற்குப் பின் நான்கு பேரை வாழ வைத்த சிறுமி: கண்ணீருடன் நினைவுகூறும் தந்தை…!!

0

கார் விபத்தில் பலியான சிறுமி ஒருத்தி தனது உறுப்புகளை தானம் செய்ததன்மூலம் நான்கு பேரை வாழ வைத்துள்ளதை நினைவு கூறுகிறார் அவளது தந்தை.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரித்தானியாவிலுள்ள Devonஇல் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் சிக்கி 9 வயது Keiraவும் அவளது தாய் மற்றும் சகோதரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இனி பிழைக்க மாட்டாள் என்ற நிலையில் Keira செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அவளது தந்தை அந்த கடினமான முடிவை எடுத்தார்.

அது அவளது உடல் உறுப்புகளை தானம் செய்வது என்பதுதான்.

எட்டு மாதங்களாக இதய மாற்று சிகிச்சைக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்த Max Johnson என்னும் 10 வயது சிறுவனுக்கு Keiraவின் இதயம் பொருத்தப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளாக சிறுநீரகம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு 30 வயது நபருக்கு அவளது ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

50 வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு அவளது இன்னொரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது,

அவளது கணையமும் கல்லீரலும் இன்னொரு சிறுவனுக்குப் பொருத்தப்பட்டன.

அவர் கூறுகையில், தனது மகளின் இதயம் பொருத்தப்பட்ட Max Johnsonஐக் காணும்போது எனது மகள் வாழ்கிறாள் என்றே நான் நம்புகிறேன், அது எனக்கு பெரிய ஆறுதலை அளிக்கிறது.

எப்போதுமே நான் உடல் தானம் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உடையவன் ஆனால், அது நம் பிள்ளைகள் என்று வரும்போது என்னால் அதைத் தாங்க இயலவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*