;
Athirady Tamil News

மாலையில் திருமணம்: காலையில் இரயில் மோதி இறந்த புதுமாப்பிள்ளை…!!

0

திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அன்றைய தினம் காலை மாப்பிள்ளை இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bareilly மாவட்டத்தில் உள்ள Nandosi பகுதியில் இருக்கும் இரயில்வே டிராக்கை Naresh Pal Gangwar(30) என்ற இளைஞர் காலை 9 மணியளவில் கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, தண்டவாளத்தில் வந்த Rajya Rani எக்ஸ்பிரஸ் இரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் இறந்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது Naresh Pal Gangwar கைகளில் இரண்டு போன்களை வைத்துள்ளார்.

ஒன்றில் பேசிக் கொண்டும், மற்றொன்றில் குறுந்தகவல் அனுப்பிய படியும் இருந்துள்ளார். அந்த கவனத்தில் இருந்த அவர், இரயில் வருவதை கவனிக்காமல் இருந்துள்ளார்.

இன்ஜினியரான இவருக்கு அன்று மாலை திருமணம் நடைபெறவிருந்ததாகவும், பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னரே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + three =

*