;
Athirady Tamil News

பேத்தி வயது பெண்ணுடன் 2-வது திருமணம்: முதல் மனைவியின் முன்னிலையில்…!!

0

ராஜஸ்தானில் 30 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 83 வயது முதியவர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் சபோத்ரா அருகே ராஹிர் கிராமத்தில் வசிப்பவர் சுக்ராம் பைரவ் (83 வயது), இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகி, பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

முதல் மனைவியுடன் வசித்து வந்த இவருக்கு, நேற்றிரவு 30 வயதுள்ள ரமேஷி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ரமேஷியை, முதல் மனைவி முன்னிலையில் மணமுடித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து பொலிசார் சென்ற போது, யாருமே புகார் கொடுக்க முன்வராததால் சுக்ராமை கைது செய்ய முடியவில்லை.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்வது குற்றம் என்ற போதிலும் யாரும் புகார் அளிக்க முன்வராததால் பொலிசார் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − four =

*