;
Athirady Tamil News

மூதூரில் 10 குண்டுகள் மீட்பு; பலகோணங்களில் பொலிஸார் விசாரணை…!!

0

திருகோணமலை – மூதூர் கிளிவெட்டி பாலத்திற்கு கீழிருந்து 10 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மில்லிமீற்றர் 40 வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று இந்த குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குண்டு செலலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செலலிழப்பு செய்துள்ளனர்.

குறித்த குண்டுகள் எவ்விதமான நாசகார செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு இங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தன என்ற விடயம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − one =

*