;
Athirady Tamil News

இலங்கைக்கு வந்த ஈரான் கடற்படைக் கப்பல்கள் தாயகம் திரும்பின…!!

0

இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் ஈரான் நாட்டின் மூன்று கப்பல்கள் வந்திருந்தன. இவ்வாறு வந்திருந்த பயண்டொர் (Bayandor), நக்டி (Naghdi) மற்றும் ரொன்ப் (Tonb)ஆகிய மூன்று கடற்படைக்கப்பல்களும் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளன.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை கடந்த 16ஆம் திகதி வந்தடைந்த இக்கப்பல்கள் மூன்று நாட்களாக அங்கே தரித்திருந்தன. இந்த கப்பல்களை கடற்படையினர் கடற்படை மரியாதைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் வழியனுப்பினர்.

குறித்த கப்பலில் வருகை தந்திருந்து ஈரான் கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படையினர் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 19 =

*