;
Athirady Tamil News

வெகுவாகப் பரவிவரும் நீரிழிவு நோய் – கட்டுப்படுத்துவதற்கு தேசிய பிரசாரத்திட்டம்..!!

0

நாட்டில் வெகுவாகப் பரவிவரும் நீரிழிவு நோயை தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய பிரசாரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி திட்டம் பற்றிய விபரங்களை கொழும்பு பல்கலைக்கழக மருத்து பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் நீரிழிவு சிறப்பு நிபுணருமான டொக்டர் பிரசாத்கட்டுலந்த தெரிவித்தார்.

‘நீரிழிவைத் தடுக்க நடப்போம் வாழ்வதற்காக ஓடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்திற்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று(19.02.2018) ஆரம்பமாகின. திருகோணமலை இந்து கலாசார நிலையத்தில் சுகாதார சிகிச்சை முகாம் இடம்பெற்றதோடு, அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் ஆரம்பமானது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று அதிகாலை ஹபரண சந்தியில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஊர்வலம் கடந்து செல்லும் பிரதேசங்களில் இலவச சுகாதார சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கான சோதனைகள் நடத்தப்பட்டு இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + seventeen =

*