;
Athirady Tamil News

ஜேர்மனி இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!!

0

வீட்டை விட்டு வெளியேறி ISIS தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஜேர்மன் பெண்ணுக்கு 6 வருட சிறை தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்தவர் Linda Wenzel, அவருடைய 15வது வயதில் Chechen எனும் ISIS தீவிரவாதி இணையதளம் மூலமாக மூளைச்சலவை செய்துள்ளான்.

ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய Linda Wenzel, கிழக்கு ஜேர்மனியில் உள்ள தனது சொந்த ஊரான Pulsnitz-ல் இருந்து துருக்கிக்கு தப்பிச்சென்று பின்னர் அங்கிருந்து ஈராக் சென்றுள்ளார்.

தொடர்ந்து ஈராக் தலைநகரான பாக்தாத்தில் தீவிரவாத குழுவில் இணைந்ததுடன், தன்னை மூளைச்சலவை செய்த நபரையே திருமணமும் செய்து கொண்டார்.

பின்னர் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் மொசூல் நகரில் நடைபெற்ற போரில் Chechen பலியானார்.

இதனை தொடர்ந்து அல்-கான்சா எனும் படைப்பிரிவில் இயங்கி வந்த Linda Wenzel உட்பட நால்வரை ஈராக் படை, கடந்த 2017ம் ஆண்டு கைது செய்தது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக Linda Wenzel-க்கு 5 வருடம் சிறையும், சட்ட விதிகளை மீறி ஈராக் நாட்டில் நுழைந்ததற்காக 1 வருடம் சிறை என மொத்தம் 6 வருடம் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது ஜேர்மனி தூதரக அதிகாரிகளும் ஈராக் நீதிமன்றத்தில் சாட்சியமாக இருந்ததாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*