;
Athirady Tamil News

சாலையில் பிச்சை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள்: நடந்தது என்ன..?

0

இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் சாலையில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் லக்னோவில் உள்ள இந்திராநகர் பகுதியில் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது மேஜர் பிபின் சந்திராவின் குடும்பம்.

திடீரென ஒருநாள், 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மேஜர் மற்றும் அவரது மனைவி பலியாகிவிட, அனாதையாக கதறி அழுதுள்ளனர் பிபினின் குழந்தைகள்.

மேஜர் இறந்த ஒரு சில தினத்தில் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டதால் செய்வதறியாது தவித்து நின்ற மேஜரின் முதல் மகள் இந்த துயரம் தாங்க முடியாமலே தன் உயிரைவிட்டுள்ளார்.

மூத்த மகளும் இறந்துவிட்ட நிலையில் செய்வதறியாது நின்ற நிலையில் 22 வயதேயான இரண்டாவது மகள் அஞ்சனா மற்றும் அவரது இளைய சகோதரர் மிகுந்த மனஉளைச்சலில் தவித்துள்ளனர்.

பின்னர் உணவிற்காக கடந்த 12 வருடங்களாக சாலையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த இருவரையும் கவனித்த மேஜரின் நண்பர் ஒருவர், அவர்கள் குறித்த தகவலை பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இருவரையும் மீட்ட பொலிசார் நிவாரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவர்களை சோதனை செய்த மருத்துவர் சுரேஷ் கூறுகையில், Schizophrenia என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பேச்சு கூட சரியாக வராத அவர்கள், தற்போது நல்ல முறையில் பேசி வருகிறார்கள், அஞ்சனா இன்னும் அவர் வாழ்ந்த வீட்டை மறக்கவில்லை, அதுகுறித்து அடிக்கடி விசாரித்தபடியே இருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் முன்னாள் மேஜராக பணிபுரிந்தவரின் பிள்ளைகளுக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது அக்கா, தம்பி இருவரின் உடல்நிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*