;
Athirady Tamil News

பாம்பின் தலையை கடித்து துப்பிய விவசாயி என்ன ஆனார்…?

0

இந்தியாவில் பாம்பு ஒன்று தன்னை கடித்து விட்டதால், ஆத்திரத்தில் விவசாயி அந்த பாம்பின் தலையை கடித்து துப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் ஹாதோய் மாவட்டம் சுக்லாபூர் பாகர் கிராமத்தை சேர்ந்தவர் சோனேலால், இவர் கடந்த சனிக்கிழமை அவரது தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அப்போது அவரது அருகில் தலை இல்லாமல் பாம்பின் தலை ஒன்று இருந்துள்ளதால், பாம்பு தான் கடித்துவிட்டது என்று அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாம்பு கடித்ததற்கான எந்த அறிகுறியுமே இல்லை என்று கூறி, தொடர்ந்து விஷ முறிவு மருந்து கொடுத்து வந்தனர்.

அதன் பின் அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கண் விழித்த சோனேலால், பாம்பு தன்னை கடித்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே பாம்பின் தலையை கடித்து துப்பிவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மருத்துவர்கள் அது எப்படி பாம்பை கடித்து துப்பிய ஒருவர் உயிருடன் இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், அங்கிருக்கும் மகள் அவரை பார்த்துச் செல்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*