;
Athirady Tamil News

இளைஞரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்…!!

0

பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் தூக்கில் தொங்கியவாறு இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

27 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வயல் வெளிக்கு சென்று கொண்டிருந்த சிலர், மரத்தில் நபரொருவர் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

பின்னரே இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eight =

*