;
Athirady Tamil News

வெடித்து சிதறும் எரிமலை: விமானிகளுக்கு எச்சரிக்கை…!!

0

இந்தோனிசியாவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள விமானநிலையங்கள் மற்றும் விமானிகளுக்கு Red Notice வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவில் Sumatra தீவில் Sinabung என்ற எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது.

இதில் வடக்கு பகுதியின் Tiga Pancur கிராமத்தில் உள்ள பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எரிமலை வெடித்து சிதறிய சத்தம் கேட்டு பள்ளியை விட்டு வேகமாக ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

அதில் வேகமாக வெளியில் வரும் மாணவர்கள் அதன்பின் அந்த எரிமலையை பார்க்கின்றனர். வெடித்து சிதறிய எரிமலையிலிருந்து சுமார் 5 கி.மீற்றர் தொலைவிற்கு சாம்பல் பறப்பதாகவும், தொடர்ந்து வெடித்து வருவதால் அருகில் இருக்கும் விமானநிலையங்கள் மற்றும் விமானிகளுக்கு Red Notice வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த எரிமலைக்கு அருகில் சுமார் 3 கி.மீற்றரிலிருந்து 7 கி.மீற்றர் தொலைவில் வரை உள்ள மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த எரிமலை வெடிப்பினால் கடந்த 2010-ஆம் ஆண்டு இரண்டு பேரும், 2014-ஆம் ஆண்டு 16 பேரும், 2017-ஆம் ஆண்டு 7 பேரும் இறந்துள்ளனர்.

இன்று காலையும் திடீரென்று எரிமலை வெடித்துள்ளது, ஆனால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்று தேசிய பேரழிவு சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 5 =

*