;
Athirady Tamil News

காதலியை குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்: நடந்தது என்ன…?

0

காதலை முறித்துக்கொள்வோம் என கூறிய காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலனும் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராஜேஷ்(வயது 23), நிவேதா இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

ராஜேஷ் கோவையில் பணிபுரிந்து வருகிறார், சென்னை வரும்போதெல்லாம் நிவேதாவை சந்திப்பது வழக்கம்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், காதலை முடித்து கொள்வதாக கூறிய நிவேதா அண்ணாநகர் டவர் பூங்காவிற்கு வரும்படி ராஜேஷை அழைத்துள்ளார்.

இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தான் கொண்டு வந்திருந்த கத்தியை வைத்து நிவேதாவை சரமாரியாக குத்திவிட்டு தானும் குத்திக் கொண்டு கீழே விழுந்துள்ளார்.

நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ள பொலிசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eight =

*