;
Athirady Tamil News

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீடு…!!

0

யாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசந்துறை வீமன் காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கிவரும் நோர்வே தொடர்ந்தும் அந்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அந்த வகையில் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 7 =

*