;
Athirady Tamil News

பிரதான வீதியில் நெல் உலரவைக்கும் விவசாயிகள்…!! (படங்கள்)

0

புளியங்குளம்,நெடுங்கேணி, முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை உலரவிடுவதன் காரணத்தினால் அப்பகுதிகளில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற் தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் வீதிகளில் காயவைப்பதனால் வீதிகளில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை உலரவிடுவதற்கான தளம் ஒன்று இல்லாததன் காரணத்தினாலேயே தாம் பிரதான வீதிகளில் நெல்லை உலரவிடுவதாக அப்பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே தமக்கான நெல் உலரவிடும் தளம் ஒன்றை அமைத்துத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*