;
Athirady Tamil News

கச்சதீவில் சிங்கள மொழியில் திருப்பலி!- தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பு…!!

0

கச்சதீவு அந்தோணியார் திருவிழாவில் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்துவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் பிப்ரவரி 23,24 ஆகிய இரு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

இதன்போது, இம்முறை திருவிழாவில் முதல் முறையாக சிங்கள மொழியிலும் திருப்பலி நடைபெறும் எனவும் ‘காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க திருப்பலி பூஜை நடத்துவார் என்றும் யாழ். மாவட்ட ஆட்சியர் வேதநாயகம் அறிவித்தார்.

இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய, இலங்கை தமிழர்கள் பங்கேற்கும் கச்சதீவு விழாவில், முதன் முதலாக சிங்கள மொழியில் பூஜை நடத்துவது தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயல் என ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − four =

*