;
Athirady Tamil News

மாதவிடாய் வலியால் துடித்த பிரித்தானிய இளம்பெண்: விமானத்தில் இருந்து வெளியேற்றியதால் அதிர்ச்சி…!!

0

பிரித்தானியாவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் மாதவிடாய் வலியால் துடித்த இளம்பெண்ணை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து Emirates விமானத்தில் Beth Evans(24) மற்றும் Joshua Moran(26) ஆகிய இருவரும் துபாய் செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில் பெத் தமக்கு மாத விடாய் வலி இருப்பதாகவும், துபாய் வரையான 7 மணி நேர பயணத்தை தாம்மால் தாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விமானப் பணிப்பெண்களிடம் தமது நிலை குறித்து அவர் விளக்கியுள்ளார். அவர்களும் மருத்துவ ஆலோசனை கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் சில நிமிடங்கள் கடந்த நிலையில், விமானத்தில் மருத்துவ ஆலோசகர் எவரும் இல்லை எனவும், அதனால் உடனடியாக விமானத்தை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பெத் மற்றும் ஜோசுவா தம்பதிகள், விமானத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள ஒரு மருத்துவரை ஏன் விமான சேவை நிறுவனங்கள் பணியமர்த்துவதில்லை என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே விமான சேவை நிர்வாகமும் பெத் மேலும் குறித்த விமானத்தில் பயணிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட பின்னர் குறித்த பெண்ணுக்கு உடல் நிலை மேலும் மோசமானால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலையே அவரை விமானத்தில் இருந்து வெளியேற்றியதாக Emirates விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*