;
Athirady Tamil News

பெண் அதிபர் மரணமடைந்தமை தொடர்பில் முறை விசாரணைகள் இடம்பெற வேண்டும்..!!

0

பாடசாலை அதிபர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கும் முகாம் ஒன்றில் ஹம்பாந்தோட்டை தேசிய பாடசாலை பெண் அதிபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறை விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியல் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்கள் தனியாருக்கு வழங்கப்படுவது சந்தேகத்திற்குரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மரணடைந்த நிகழ்வு தொடர்பில் கல்வி அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகள் நிறைவடையும்வரை கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற அனைத்து பயிற்சி முகாம்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் – வாரிபொலவில் உள்ள வயம்ப பயிற்சி முகாமில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையொன்றின்போது பெண் அதிபர் விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

கயிற்றில் தொங்கி செய்யப்படும் ஒரு பயிற்சியின் போது கைவிடுப்பட்டதினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 2 =

*