;
Athirady Tamil News

ஒருவர் சடலமாக மீட்பு மற்றொருவின் நிலை தெரியவில்லை.., பெற்றோர் பதற்றத்தில்…!!

0

கொஸ்கம கழுஹக்கல பகுதியை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

21 வயதுடைய கஹபிட்டி பகுதியில் வசிக்கும் இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள 19 வயதுடைய பிரிதொரு இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்களுக்காக வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*