;
Athirady Tamil News

வவுனியா திருநாவற்குளத்தில் இளைஞர்களிடம் மாட்டிய முதலை…!! (படங்கள்)

0

வவுனியா திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புக முற்பட்ட முதலை ஒன்றினை இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 1130 மணியளவில் திருநாவற்குளத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புக முற்பட்ட 5.5 அடி நீளமான முதலையினை இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு வன ஜீவராசிதிணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. அன்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் வரட்சி காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிக்காணப்படுவதனாலே இந்நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 20 =

*