;
Athirady Tamil News

இலங்கையில் செயற்கை மழை – தாய்லாந்து பொறியியலாளர்கள் விஜயம்…!!

0

மத்திய மலைப்பிரதேசத்திலுள்ள நீர் மின் உற்பத்திக்கான பிரதான நீர்ரேந்து பகுதிகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது.

இதனால் இந்த பிரதேசத்தில் செயற்கை மழைக்கு வழிவகை செய்வது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக தாய்லாந்தை சேர்ந்த பொறியிலாளர்கள் சிலர் நேற்று காசல்றீ மற்றும் மவுசகலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த வெளிநாட்டு பொறியிலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

செயற்கை மழையை ஏற்படுத்துவது தொடர்பில் சர்வதேச பற்றன்ட் அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள ஒரேயொரு நிறுவனம் தாய்லாந்திலேயே உண்டு. இந்த நிறுவனத்தினால் தாய்லாந்து அரசாங்கத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் வறட்சி நிலவும் நாடுகளில் செயற்கை மழையை ஏற்படுத்தி வறட்சிக்கு வெற்றிகரமான தீர்வை இந்த நிறுவனம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தினால் 1981 ஆம் ஆண்டு காசல்றீ மற்றும் மவுசகலை நீரேந்துபகுதிகளில் நிலவிய வறட்சியின் போது செயற்கை மழையை ஏற்படுத்தி வெற்றிகரமான பெறுபேறு பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவினருடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் ஒருவர் இதுதொடர்பிலான விடயத்தை தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை , இலங்கை விமானப்படை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை , மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஆகியன இந்த நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயற்கை மழையை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களில் கண்டறிய ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

விமானம் , ஹெலிகப்டர் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த நீரேந்து பிரதேசங்களின் வானத்தில் உள்ள முகில்கூட்டங்கள் மீது திரவத்தை பயன்படுத்துவதன் மூலம் செயற்கை மழை ஏற்படுமென்றும் அந்த பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த குழுவினர் கொத்மலை விக்டோரியா றந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்களையும் பார்வையிடவுள்ளனர்.

இவ்வாறான செயற்கை மழையினால் மனிதருக்கோ செடிகொடிகளுக்கோ சுற்றாடலுக்கோ எந்தவித பாதிப்பும் இதுவரையில் ஏற்படவில்லை. செயற்கை மழை பெய்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து இந்த விடயங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்தக்குழுவினர் தெரிவித்தனர்.

சில நாடுகளில் பாரியளவில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களினால் வறட்சி காலங்களில் தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து செயற்கை மழைக்கான உதவிகள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 5 =

*