சுவிஸ்லாந்து தூதுவர் – இராணுவ தளபதி சந்திப்பு…!!

இலங்கை, மாலைதீவு, சுவிஸ்லாந்து தூதுவரான ஹெயின்ஷ் வோகர் நெதர்கோர் (Heinz Walker-Nederkoorn) இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இராணுவத்தலைமையகத்திற்கு வருகை தந்த தூதுவரை இராணுவ பிரதி கேர்ணல் கே.ஏ.ஏ. உதய குமார வரவேற்றார்.
இந்த நட்புரீதியான சந்திப்பின்போது, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் சமரசம் மற்றும் இன ரீதியிலான ஈடுபாட்டை முன்னெடுப்பதற்காக இராணுவத்தின் பொறுப்புகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பின் போது சுவிஸ்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட பிரதிநிதியும் கலந்து கொண்டார்.